Advertisment

கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஊதியம் வழங்க முடியும்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆசிரியர்களை கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கும் நிலையில் எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியுமெனவும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court, madras high court, police, government doctors, health workers, salary, centre, states, corona virus

chennai high court, madras high court, police, government doctors, health workers, salary, centre, states, corona virus

private school teachers salary issue: கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Advertisment

தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை வசூலிக்க கூடாது என்ற அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த வழக்கில்,தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் தான் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருவதாகவும், தற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆர் எஸ் பாரதி ஜாமீன் வழக்கு: காவல்துறை மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு!

இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பிற ஊழியர்களுக்கும் ஊதியத்தை முறையாக வழங்க வேண்டுமென்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கின்ற நிலையில், அரசு உதவி பெறாத பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி சம்பளத்தை வழங்க முடியுமென கேள்வி எழுப்பினர்.

ஆன்லைன் வகுப்புகளை பெரும்பாலான பள்ளிகள் தொடங்கிவிட்டு, வகுப்புகளை நடத்த ஆசிரியர்களை கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கும் நிலையில் எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியுமெனவும் கேள்வி எழுப்பினார்.

பின்னர் வழக்கு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment