/tamil-ie/media/media_files/uploads/2023/07/Try-news-1.jpg)
திருச்சியில் தனியார் பள்ளி உணவகத்தில் சாப்பிட்ட மாணவர்களுக்கு ஒவ்வாமை; உணவுக்கூடத்திற்கு தடை
திருச்சியில் தனியார் பள்ளி உணவகத்தில் சாப்பிட்ட மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், இந்த பள்ளியின் உணவுக்கூடத்தை தற்காலிகமாக தடை செய்தனர்.
திருச்சி விமான நிலையம் பகுதி அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
அந்தப்பள்ளியில் இயங்கி வந்த கேண்டினில் அங்கு பயிலும் மாணவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார் கொடுத்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-21-at-3.59.32-PM.jpeg)
இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு சென்று உணவகத்தில் ஆய்வு செய்தனர். உணவகம் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்தது தெரியவந்தது. மேலும், உரிமம் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து பள்ளியின் உணவு தயாரிப்பு கூடத்தில் உணவு தயாரிப்பதை தடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மாணவர்களை சந்தித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.