கோவை மாவட்ட ராஜ் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் வேலுமணி.
இவர் கடந்த 4 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிக்கையாளர்கள் சார்பில் செய்தியாளர் வேலுமணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/eW2wTiRPEWlwthb4ibK9.jpg)
/indian-express-tamil/media/media_files/rqlSTRe0cuFieyDOJhNI.jpg)
இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தியபடி மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிரிழந்த செய்தியாளர் வேலுமணியின் இரண்டு மகள்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அரசின் சார்பில் சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் பத்திரிக்கையாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“