யார் இந்த பிரியா? தெலங்கானா புதிய கட்சிக்கு வியூகம் வகுக்கும் திமுக எம்எல்ஏ மகள்

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா தொடங்கும் புதிய கட்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரனின் மகள் பிரியா சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக இணைந்துள்ளார்.

Priya DMK MLA rajendran's daughter, DMK MLA rajendran's daughter Priya, thiruvallur contituency MLA rajendran, DMK MLA rajendran daughter commits as social media strategist, பிரியா, திருவள்ளூர், திமுக எம் எல் ஏ ராஜேந்திரன் மகள் பிரியா, ஒய் எஸ் ஆர் மகள் ஷர்மிளா, ஷர்மிளா புதிய கட்சி, திமுக எம் எல் ஏ ராஜேந்திரன் மகள் பிரியா சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட், YSR's daughter Sharmila's new party social media strategist, prashant kishore, IPAC, Priya, Priya social media strategist, YSR daughter Sharmila, Telangana, Andhra Pradesh, thiruvallur dmk mla rajendran

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா தெலங்கானாவில் தொடங்கவுள்ள புதிய கட்சிக்கு திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரனின் மகள் பிரியா சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்து செயல்பட்டார். அவருடைய ஐபேக் குழுவினர் திமுகவின் பிரச்சார வேலைகளை மேற்கொண்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் போல தேர்தல் வியூகம் வகுக்க ஸ்ட்ரேட்டஜிஸ்ட்களை ஒப்பந்தம் செய்துகொள்வது என்பது இந்திய அரசியலில் பத்தாண்டுகளாக வெளிப்படையாக நடந்து வருகிறது.

இந்த சூழலில்தான், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய ஆந்திராவின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா தெலங்கானாவில் புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷர்மிளா தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை 8ம் தேதி தனது புதிய கட்சியை தெலங்கானாவில் தொடங்குகிறார். கட்சியின் பெயர் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா புதிய கட்சி தொடங்குவதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரனின் மகள் பிரியா சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக இணைந்துள்ளார். பிரியா ஏற்கெனவே பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவில் ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக வேலை செய்துள்ளார்.

அண்மையில், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளாவை அவருடைய லோட்டஸ் பாண்ட் (தாமரைக் குளம்) இல்லத்தில் பிரியா சந்தித்து பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை பிரியா எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ வி.ஜி ராஜேந்திரனின் மகள் பிரியா, ஒய்.எஸ்.ஆர் மகள் தெலங்கானாவில் தொடங்கும் புதிய அரசியல் கட்சிக்கு சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக இணைந்துள்ளது தமிழ்நாடு அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Priya dmk mla rajendrans daughter commits as social media strategist to ysrs daughter sharmilas new party

Next Story
வளைக்கப்பட்ட வலதுகரம்… எடப்பாடியில் ஸ்டாலின் கொடுத்த ஷாக்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com