திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பழமைவாய்ந்த சிலைகள் காணாமல் போனதாக வெளியான புகாரையடுத்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐ.ஜி. பொன்.மானிக்கவேல் :
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் உள்ள உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், மூலவர் சிலை மற்றும் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சிலைகடத்தல் தடுப்புக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், இதுதொர்பாக, ஆரம்பக் கட்ட விசாரனை நடத்தி ஆறு வார காலத்திற்க்குள் அறிக்கை அளிக்க உத்திரவிட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் சிலைதடுப்பு பரிவு, ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் 50 போலிசாருடன் உள்ளே நுழைந்து ஆய்வு செய்தனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மானிக்கவேல், ஏ.டி.எஸ்பி. ராஜாராம் ஆகியோர் ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானம், சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது புகார் கொடுத்த ரங்கராஜ நரசிம்மன் உடன் சென்றார். அவர் கோவிலில் எங்கெல்லாம் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் மாயமாகி உள்ளது என்பது பற்றி விளக்கி கூறினார்.
இதற்கு கோவில் இணைஆணையர் ஜெயராமன் விளக்கம் அளித்தார். இந்த காட்சிகள் அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். சுமார் 3 மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது.