/tamil-ie/media/media_files/uploads/2017/10/z524.jpg)
சசிகலா சிறப்பு வசதி
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மைதான் என்று விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு சிறப்பு வசதி :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். அதனை சிறைத்துறை உயரதிகாரிகள் மறுத்தனர்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்டக்குழு, சிறையில் ஆய்வு மேற்கொண்டது. அது தொடர்பான அறிக்கையை கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பித்தது. இருப்பினும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தன.
இந்நிலையில், அந்த அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், சசிகலாவுக்கும். இளவரசிக்கும், சிறையில் விதிகளை மீறி ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறை வளாகத்தில் உள்ள 28 அறைகளி்ல் 100 பெண்கள் இருந்தனர்.அறைக்கு நான்கு பேர் வீதம் தங்கவைப்பதற்கு பதிலாக சசிகலாவுக்கு ஐந்து அறைகள் ஒதுக்கியது போக மீதமிருந்த 20 அறைகளில் 98 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சிறை அலமாரியை துழாவியபோது சமையல் மஞ்சள்தூள் காணப்பட்டது. அது அங்கு சமையல் நடந்ததை உறுதி செய்கிறது என பல்வேறு தகவல்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.