Sasikala's OMR land : பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) பகுதியில், சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்கான நெடுஞ்சாலை துறையின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து அறிவித்தது. பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான மொத்தம் 8,438 சதுர அடி நிலத்தை ஓ.எம்.ஆர். சாலை விரிவகத்திற்காக கையகப்படுத்தியது நெடுஞ்சாலைத் துறை.
செப்டம்பர் 16, 2011 தேதியிட்ட உத்தரவை எதிர்த்து சசிகலா முன்வைத்த மனுவை அனுமதித்து, சட்டப்படி அவருக்கு நோட்டீஸ் கொடுத்த பிறகு மீண்டும் விசாரணையைத் தொடங்க அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தார் நீதிபதி ஜி.கே. இளந்திரையன். இது ஓ.எம்.ஆர். சாலையை விரிவுபடுத்துவதற்காக தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சினை.
நிலம் கையகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அதற்கு எதிராக 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி அன்று நிலம் கையகப்படுத்தும் அதிகாரத்திற்கு எதிராக விரிவான ஆட்சேபனையை தெரிவித்தார். ஜனவரி 22, 2010 அன்று, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முன்பு சட்டத்தின் பிரிவு 15 (2) இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டது. மனுதாரர் ஆட்சேபனைகளை ஆட்சியரிடம் சமர்ப்பித்தார். இதுவரை அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை, எனவே விசாரணை செல்லுபடியாகாது என்று மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் கூறினார். ஆனாலும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி 2011ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது என்றும் அது தொடர்பான ஆவணங்களை, இழப்பீடு பெறுவதற்காக கொண்டு வாருங்கள் என்று கூறப்பட்டதாகவும் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போதைய மனுவை தாக்கல் செய்தார் சசிகலா.
அதை எதிர்த்து, கையகப்படுத்தல் நடவடிக்கைகள் சட்டபூர்வமாக தொடங்கப்பட்டதாக சமர்ப்பித்து, அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. வழக்குகள் முடிவடைந்த போதிலும், தற்போதைய மனு நிலுவையில் உள்ளதால் நிலத்தை கையகப்படுத்த முடியவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக நோட்டீஸை மனுதாரர் பெறாத காரணத்தால் அவருடைய நிலத்தில் அந்த நோட்டீஸ் கிராம நிர்வாக அதிகாரியால் மே மாதம் 6ம் தேதி, 2011ம் ஆண்டு ஒட்டப்பட்டது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil