தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே தொழில் வரி உயர்வு நடைமுறைக்கு வரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்ற திங்கள்கிழமை மாதம் ரூ.21,000க்கும் மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு தொழில் வரி 35 % அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த வரி ஆண்டு இருமுறை வசூலிக்கப்படும்.
மாதம் ரூ,21,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ.135ல் இருந்து ரூ.185 ஆக அதிகரிப்படும். மாதம் ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ.315ல் இருந்து ரூ.430 ஆக அதிகரிப்படும்.
மாதம் ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ.690ல் இருந்து ரூ.930 ஆக அதிகரிக்கப்படும். இந்நிலையில் இந்த தீர்மானம் பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கு வரி சுமையை அதிகரிக்கும் என்பதால் பலதரப்பிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இந்த தொழில் வரி உயர்வு இப்போதைக்கு உயராது என்றும் தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே உயரும் என்று சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் தொழில் வரி உயர்வை தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“