பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாகப் பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளை பாலியல் பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்து தொலைப்பேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடல் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இந்த உரையாடலைத் தானே பேசியுள்ளதாகவும், கூறவந்த விஷயத்தை மாணவர்கள் வேறு மாதிரி புரிந்து கொண்டதாகவும் நிர்மலா தெரிவித்தார். இவ்வாறு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து நேற்று அருப்புக்கோட்டை போலீசாரால் 6 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டார். பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.

நேற்று இரவில் இருந்து அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அருப்புக்கோட்டை டிஜிபி ராஜேந்திரம் உத்தரவிட்டுள்ளார். கடும் எதிர்ப்புகளும் நெருக்கடியும் அதிகரித்து வரும் இந்த வழக்கில் உயர்மட்ட குழுவைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close