நான்கு சக்கரை வாகனங்களில், ஸ்டைலான மற்றும் தோற்றத்தை அழகாக காட்டக்கூடிய பம்பர்களை பொருத்த இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி வாகனங்களில் பம்பர்கள் பொருத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பம்பருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், விபத்துக்களை குறைக்கும் என்று கூறி, பல உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு இந்த பம்பர் மற்றும் இதர தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழக போக்குவரத்து அதிகாரிகளும் காவல்துறையினரும் இது போன்ற தடை செய்யப்பட்ட பம்பர்கள் பயன்படுத்தும் வானங்களை பிடித்து அதே இடத்தில் பம்பரை அகற்றுவதும், அந்த வாகனத்தில் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதும் என அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை பம்பர் தாங்கிக் கொள்வதால், வாகனத்தில் உள்ள சென்சார் செயல்படுவதில் சிக்கல் ஏற்படும்.
மேலும் வானகங்கள் விபத்து ஏற்பட்டால், ஏர்பேக்குகள் வெளிவருவதை இந்த பம்பர்கள் தடுக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் கார் ஓட்டுபவர், காரில் பயணிப்பவர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படும். இந்த பம்பர்கள் வாகனத்தின் சென்சார்களை மறைத்து விடுகிறது. இதனால் வானம் அதிவேகமாக செல்வதை சென்சார்கள் கண்டறிய இயலாத நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது, பொதுமக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பம்பர் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக போலீசார், வாகனங்களில் இருந்து பம்பரை அகற்றும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
நவீன ரக அனைத்து கார்களிலும் ‘ஏர்பேக்’ குகள் பொருத்தப்பட்டு உள்ள நிலையில், ரேடியேட்டரின் உள்ளே நடக்கும் ரசாயன மாற்றங்கள் மூலமே ஏர்பேக்கில் நைட்ரஜன் காஸ் நிரப்பப்பட்டு வெளியே வரும். ஒரு நொய பொழுதில் நடைபெறும் இந்த செயல்கள் நம்மை விபத்தில் இருந்து உயிர் தப்ப உதவும். ஆனால் காரில் பம்பர் பொருத்தி இருந்தால், இந்த செயல் ஏதும் நடக்காமல் நாம் பெரும் விபத்தை சந்திக்க நேரிடும்.