கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாராபுரம் கைதோடு கோவில் விளாகம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை (74) இவரது மனைவி தங்கம் (63).
இவர்களுக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் இறந்து விட்டார். இளைய மகன் அனீஷ் (35) என்பரோடு வசித்து வந்தனர். இதில் தங்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.
இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தாயின் பெயரில் இருக்கும் வீடு மற்றும் 7 சென்ட் நிலத்தை தாய் தங்கம் அனீஷ் பெயரில் பதிவு செய்து கொடுத்திருந்தார்.
அனிஷ் திருமணமாகி முதல் மனைவியை பிரிந்த நிலையில் இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார்.
-
நீலகண்டன், தங்கம்
இவர்கள் தற்போது தாய்-தந்தையரை கவனித்துக் கொள்வதில்லை. சாப்பிட உணவு கூட கொடுக்கவில்லை. இது தொடர்பாக தங்கம், பத்மநாபபுரம் உட் கோட்ட நடுவரும், துணை ஆட்சியருமான கவுசிக்கிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் இரு தரப்பினரையும் கூட்டி கவுசிக் விசாரித்தார்.
அப்போது அனிஷ் பெற்றோரை முறையாக கவனிக்காதது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பத்திரப் பதிவை ரத்து செய்து, நிலத்தை மீட்டு தங்கத்திடம் ஒப்படைத்தார்.
துணை ஆட்சியரின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டினர்.
செய்தியாளர் த.இ.தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/