/indian-express-tamil/media/media_files/jXScxqhtqil8JLs7b6yL.jpg)
சொத்து வரி தொடர்பாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாநகராட்சி
Greater Chennai Corporation | Central Government: சொத்து வரியை நிலுவையில் வைத்துள்ள கட்டடங்கள் மீது, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட் சொத்து வரியை நிலுவையில் வைத்துள்ளது. இது குறித்து பல முறை தகவல் தெரிவித்தும் இன்னும் அந்த தொகை செலுத்தப்படவில்லை.
இந்நிலையில், நிலுவையில் உள்ள ரூ.10.37 கோடி சொத்து வரியை செலுத்தவில்லை என்பதால், மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்டுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள தொகை செலுத்தவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதேபோல் சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.