Congress | Dmk | Lok Sabha Election | தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க.வும், காங்கிரசும் திங்கள்கிழமை (மார்ச் 18,2024) தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்தன.
இரு கட்சிகளுக்கும் இடையே கையெழுத்தான தேர்தல் ஒப்பந்தத்தின்படி, காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 இடங்களும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக தலைமையிலான இந்திய அணி சார்பில் காங்கிரஸ் திருவள்ளூர் (எஸ்சி), கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இதற்கிடையில், விஷ்ணு பிரசாத் மற்றும் சு.திருநாவுக்கரசர் ஆகியோரின் சிட்டிங் சீட்களை விட்டுக்கொடுக்க திமுக தலைமை காங்கிரஸை வற்புறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேனி திருநாவுக்கரசருக்கு ஒதுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. திமுக, ஆரணி, திருச்சி, தேனி ஆகிய 3 தொகுதிகளுக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய மூன்று தொகுதிகளை காங்கிரஸிடம் ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கடலூரில் போட்டியிடலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த மயிலாடுதுறைக்கு அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி முன்னணியில் உள்ளார்.
இது மணிசங்கர் ஐயரால் குறைந்தது இரண்டு முறை வெற்றி பெற்ற இடமாகும். பிடிஆர் ஆடியோ டேப் சர்ச்சையால் திமுகவினர் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் பிரவீனுக்கு சீட் ஒதுக்கப்படலாம்.
மேலும் திருவள்ளூர் தனித்தொகுதி என்பதால், காங்கிரஸ் புதிய முகத்தை களமிறக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன- பெரும்பாலும் கர்நாடகாவை சேர்ந்த அனுபவமிக்க அதிகாரி சசிகாந்த் செந்தில் இந்த இடத்தில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி தொகுதிகளை முறையே கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த் ஆகியோர் தக்கவைத்துக் கொள்வார்கள்.
இந்த நிலையில், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), ம.தி.மு.க., தமுமுக மற்றும் கே.டி.எம்.கே ஆகிய கட்சிகளுக்கு தமிழகத்தில் 18 இடங்களையும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியையும் விட்டுவிட்டு 21 தொகுதிகளை திமுக தக்கவைத்துள்ளது.
சென்னை மற்றும் கோவையில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக போட்டியிடும். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்பு கோவையில் திமுக போட்டியிடுகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் கோவையில் தி.மு.க களம் காண்கிறது.
இப்பகுதியில் இருந்து திமுகவுக்கு வலுவான தலைவர் இல்லாததால், கோவை மாவட்டம் அக்கட்சிக்கு சவாலாக இருக்கலாம். தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“