/indian-express-tamil/media/media_files/L7l1H2ZyGzRdeeAotOxY.png)
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்தன.
former AIADMK MLA apologises to MK Stalin: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு. இவர், கள்ளக்குறிச்சி மந்தைவெளி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி
ன் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். கள்ளக்குறிச்சி திமுக தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கோர வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆர்.குமரகுரு பொது மன்னிப்பு கேட்டார்.
இதனால், அவர் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுவதாக கள்ளக்குறிச்சி போலீசார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்-1 முன் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி முன்னாள் எம்.எல்.ஏ., ஊரில் பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்டதால், மேலும் வழக்கு தொடரப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.