இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த 4-ம் தேதி முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இருந்து பலர் பங்கேற்க வருகின்றனர்.
மொத்தம் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணி இடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன.
திங்கள் முதல் வருகின்ற நவம்பர் 10 - ம் தேதி வரை இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாளொன்றுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு தேதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவை நோக்கி படையெடுத்து வந்து கொண்டு உள்ளனர். மேலும் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வருகை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வில் அதிகளவில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் சேர்ந்தவர்கள் கோவை நோக்கி வந்து கொண்டு உள்ளனர்.
அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதி, கழிப்பறை வசதி என அடிப்படை வசதிகள் இன்றி பரிதவித்து வந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறை துணை ஆணையர் ஸ்டாலின் அவர்களுக்கு அருகில் உள்ள தனியார் மண்டபலங்களின் தங்குவதற்கு ஏற்பாடு செய்து அவர்களை காவல்துறை வாகனங்களில் ஏற்று அனுப்பி வைத்தார் - இதனை அங்கிருந்து வழக்கறிஞர் பைசல் என்பவர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து அவரது தொலைபேசியில் எடுத்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனைக் கண்ட வட மாநில இளைஞர்கள் காவல் துறையினருக்கு நன்றிகளை தெரிவித்து சென்றனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“