'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'.. ஜூலை 7-ம் தேதி முதல் இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப் பயணம்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் வரும் 7-ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்.

author-image
WebDesk
New Update
Edappadi K Palaniswami

'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'.. ஜூலை 7-ம் தேதி முதல் இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப் பயணம்

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்" என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, 7.7.2025 முதல் 21.7.2025 வரை முதல் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டமன்றத்தொகுதி வாரியாக, 'புரட்சித் தமிழரின் எழுச்சிப்பயணம்' தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டாக 7 மாவட்டங்களில் 34 சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

Advertisment

07.07.2025 - மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம்

8.07.2025 - கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு

10.07.2025 - விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம்

11.07.2025- வானூர், மயிலம், செஞ்சி

12.07.2025- கடலூர், பண்ருட்டி, நெய்வேலி

14.07.2025- குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம்

15.07.2025 - சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை

16.07.2025- நன்னிலம், திருவாரூர், கீழ்வேளூர்

17.07.2025 - நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி

18.07.2025- மன்னார்குடி, திருவிடைமருதூர், கும்பகோணம்

19.07.2025- பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு

21.07.2025 - ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி

Edappadi K Palaniswami

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: