தேவர் பெயர் சூட்டக் கோரி விமானத்திற்குள் போராட்டம்! அரண்டு போன இண்டிகோ பயணிகள்! (வீடியோ)

விமானம் திருச்சியை கடக்கும்போது திடீரென கொடிபிடித்து உள்ளேயே போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரி சென்னையில் இருந்து மதுரை வரும் இன்டிகோ விமானத்திற்குள் புகுந்து பார்வார்ட் பிளாக் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி முக்குலத்தோர் சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சென்னையிலிருந்து திருச்சி வழியாக இன்று சென்ற இன்டிகோ விமானத்திற்குள் பாரதிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் முருகன் ஜி தலைமையில் பயணிகள் போல போராட்டக்காரர்கள் சிலர் இருந்துள்ளனர். விமானம் திருச்சியை கடக்கும்போது திடீரென கொடிபிடித்து உள்ளேயே போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.


இதனால், பதட்டமடைந்த விமான ஊழியர்கள், சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு தகவல் தெவித்துள்ளனர். மதுரை விமான நிலையத்தில் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். பெருங்குடி காவல் நிலைய காவலர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் மதுரை விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விமானம் தரை இறங்கிய பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Protest inside indigo plane madurai airport muthuramalingam thevar

Next Story
திராவிட கலாச்சாரம் விடை பெறுகிறதா? பிரசாரத்தில் ‘மிஸ்’ ஆன நட்சத்திரங்கள்cinema celebrities campaign missing in tamilnadu, தமிழ்நாடு தேர்தல், நடிகைகள் பிரசாரம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com