/indian-express-tamil/media/media_files/wKfVJ770i6EjK9yLQN7L.jpg)
மேற்குவங்க முன்னாள் தலைமை செயலர் பி.எஸ். ராகவன் சென்னையில் நேற்று மரணமடைந்தார்.
சென்னை, அடையாறில் வசித்து வந்த பி.ஸ்.ராகவன், உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இவருக்கும் வயது 97. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பி.எஸ். ராகவனின் இறுதி சடங்கு 11.30 மணிக்கு பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சத்துணவு திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர். சென்னை பூந்தமல்லியில் பிறந்த இவர், கடந்த 1952ம் ஆண்டு மேற்கு வங்க பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வு செய்யபட்டார். மேற்குவங்கம், திரிபுரா மாநில அரசுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
1961ம் ஆண்டு தேசிய ஒருமைப்பாடு குழுவில் செயலாளராக பொறுப்பேற்று அப்போதைய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி உள்ளிட்டவர்களுடன் பணியாற்றி உள்ளார்.
டெல்லியில் மத்திய உணவுத்துறை கூடுதல் செயலாலராக இருந்தபோது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கு கூடுதல் அரிசியை ஒதுக்கினார். இதனால்தான் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவர உதவியாக இருந்தது.
மத்திய அரசில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த பி.எஸ்.ராகவன் கடந்த 1987ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதி உள்ளார். தமிழில் ’நேரு முதல் நேற்று வரை’ என்ற நூலை எழுதி உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.