பி.டி. அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கேற்க தடை : பா.ஜ., மாநில தலைமை அறிவிப்பு
BJP Tamilnadu Bans P T Arasakumar: அரசகுமார், கட்சி சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ள தடை விதிக்கப்படுவதாக கட்சி மாநில தலைமை அறிவித்துள்ளது.

dmk, stalin, cm, bjp, pt arasakumar, koovathur, mk stalin, bjp, admk, edappadi palanisamy, ஸ்டாலின், திமுக, பாஜக, அதிமுக, எடப்பாடி பழனிசாமி, முதல்வர்
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து திருமண நிகழ்ச்சியில் பா.ஜ. மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார் பேசிய நிகழ்வு, கட்சி மாநில தலைமைக்கு பெரும்கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு பரிந்துைர செயயப்பட்டுள்ளது. கட்சி மேலிட உத்தரவு வரும்வரை, அரசகுமார், கட்சி சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ள தடை விதிக்கப்படுவதாக கட்சி மாநில தலைமை அறிவித்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து தான் கூறிய கருத்து திரித்துக்கூறப்பட்டுள்ளது. அது எனது சொந்த கருத்தேயன்றி, பாரதிய ஜனதா கட்சியின் கருத்து அல்ல. ஸ்டாலின் குறித்து தான் கூறியது தொண்டர்களை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் என்று பா.ஜ., மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் . இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமாரும் கலந்து கொண்டார். அப்போது அவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.
Advertisment
Advertisements
அவர் பேசியதாவது: உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்தவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். என்றைக்கும் நிரந்தர தலைவராக இருப்பவர் ஸ்டாலின்தான். எம். ஜி.ஆருக்கு அடுத்தபடியாக நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின் மட்டுமே. முதல்வர் இருக்கையை தட்டிப்பறிக்க நினைத்திருந்தால் ஸ்டாலின், கூவத்தூர் பிரச்சினையின்போதே முதல்வர் ஆகியிருப்பார். ஜனநாயக முறையில் அவர் முதல்வர் ஆக விரும்புகிறார். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். ஸ்டாலின் நிச்சயம் அரியணை ஏறுவார். நாம் அதை யெல்லாம் பார்க்க போகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் முரசொலி பஞ்சமி நில விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் திமுக தலைவரை பாராட்டி பேசியிருக்கிற நிகழ்வு, பா.ஜ., மட்டுமல்லாது அதிமுகவினரிடையேயயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனது தனிப்பட்ட கருத்து - அரசகுமார் : ஸ்டாலின் குறித்து தான் கூறியது தனது தனிப்பட்ட கருத்து. தான் பேசிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. இந்த கருத்தை பா.ஜ.வின் குரலாக தான் ஒலிக்கவில்லை என்று சென்னை திரும்பிய அரசகுமார், விமானநிலையத்தில் தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.