சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யத் தொடங்கியதும், மதுரையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அறிவித்தார்.
சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் கூறியதாவது: கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்கத் தமிழ்ப் பண்பாட்டு தல வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும் என்றார்.
இந்த பயணங்கள் இனத்தின் செம்மையான பயணங்கள், கலை, பண்பாடு, கைவினை பொருட்கள், உணவு முறையை வெளிக் கொண்டுவருவதோடு தமிழ்நாடு புகழையும் இது பரப்பும் என்றார்.
மேலும், சோழப் பேரரசு பங்களிப்பைப் போற்றும் வகையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"