தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில், விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவைகயில் 2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்து வருகிறார்.
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் தனது பட்ஜெட் உரையில், புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் ரூ.410 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதியதாக அமையவிருக்கும் சிப்காட் தொழிற்பூங்காக்களால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். அதிகளவில் தொழில் முதலீடுகளை தமிழ்நாடு கடந்த 2 ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மேலும், தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் புதிதாக ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 32 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டுகளாக தமிழ்நாடு தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 3,59,000 பேருக்கு வேலை வாய்ப்பு, 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளன என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“