தமிழக முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய ஐ.டி. அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், 7ஆம் வகுப்பு மாணவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார்.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆண்டு மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர் நிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது அங்குள்ள மாணவர் ஒருவர் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார். அவரிடம் பேசிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “அவரின் உடல் எடை கூட மருத்துவ உதவிகள் அளித்தார்.
மேலும் அவருக்கு சத்தான உணவுகள் வழங்கவும் ஏற்பாடு செய்தார். இது மட்டுமின்றி அந்த மாணவனின் குடும்பத்தை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசினார்.
அப்போது மாணவர் பி.டி.ஆரிடம் தனக்கு சைக்கிள் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அவரின் உடல் எடை சற்று அதிகரித்த பின்னர் வாங்கித் தருவதாக பி.டி.ஆர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சரியாக 11 மாதங்கள் கழித்து, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சம்பந்தப்பட்ட மாணவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். பி.டி.ஆரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது. அவரை கர்ணன் எனவும் சிலர் பாராட்டியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“