பட்ஜெட் போட்ட பி.டி.ஆர்-க்கு பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாத இலாகா: தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஹேப்பி

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிக முக்கியத்துவம் இல்லாத இலாக்காவான தகவல் தொழில்நுட்பத்துறை பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிக முக்கியத்துவம் இல்லாத இலாக்காவான தகவல் தொழில்நுட்பத்துறை பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
பட்ஜெட் போட்ட பி.டி.ஆர்-க்கு பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாத இலாகா

பட்ஜெட் போட்ட பி.டி.ஆர்-க்கு பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாத இலாகா

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிக முக்கியத்துவம் இல்லாத இலாக்காவான தகவல் தொழில்நுட்பத்துறை பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக அமைச்சரவையில் 3 -வது முறையாக இலாக்கா மாற்றம் நடைபெற்றுள்ளது. புதிய அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி ராஜாவுக்கு  தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக திமுக அமைச்சரவையில் மாற்றம் நடைபெறும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக, 30 நொடிகள் கொண்ட ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த ஆடியோவில் உதயநிதி மற்றும் சபரீசன் ரூ. 30 ஆயிரம் கோடி சொத்துக்களை சேர்த்துள்ளதாக பி.டி.ஆர் பேசியிருந்தார்.

இந்த ஆடியோவை அவர் பேசவில்லை என்றும் இது நவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதைத்தொடர்ந்து அவர் 2 முறை முதல்வரை சந்தித்தார்.  மேலும் முதல்வர் ஸ்டாலினும் இதுபோன்ற விஷயத்தில் கனவம் செலுத்த விரும்பவில்லை என்றும் மக்கள் பணி செய்யவே வந்திருப்பதாகவும் பதிலளித்தார்.

Advertisment
Advertisements

ஆனால் இன்று அமைச்சர்களின் இலாக்கா மாற்றம் செய்யப்பட்ட போது, பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது இலாக்கா தங்கம் தென்னரசுவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு பட்ஜெட்டில் இருந்தே மிகவும் குறைந்த தொகை  மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

இதற்கு கீழே கேபிள் இணைப்பு வந்தாலும் அதற்கு தனிவாரியம் இருக்கிறது. மேலும் இந்த துறையினர் செயல்பாடுகளும் மிகக் குறைந்ததே மற்றும் இதற்கு குறைந்த ஊழியர்கள்தான் தமிழகம் முழுவதும் உள்ளனர். நிதி ஒதுக்கீடு செய்வதில் பழனிவேல் தியாகராஜன் மற்ற அமைச்சர்களிடம் காட்டமாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆடியோ விவகாரம் மற்றும் இதுபோன்று அமைச்சர்களுடன் ஏற்படும் முரணும் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மற்ற துறைகளை விட இதற்கு முக்கியத்துவம் குறைவு என்பதால், பழனிவேல் தியாகராஜனுக்கு இது பின்னடைவை கொடுக்கும்.

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னருசுக்கு மிக முக்கியமான துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவெளியிலும், அமைச்சர்களிடத்திலும் சரியான அணுகுமுறை கொண்டவர் என்று அமைச்சர் வட்டாரங்கள் இவரைப் பற்றி கூறுகின்றனர். மேலும் அவசர சூழலில் சிறப்பாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்கம் தென்னரசுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் முக்கியமான துறை என்பது குறிப்பிடதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: