Advertisment

அமைச்சரவை மாற்றம்: உடனடியாக ஃபேஸ்புக், ட்விட்டர் பயோ-வை மாற்றிய பி.டி.ஆர்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் செய்ததையடுத்து, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உடனடியாக தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பயோ-வை அப்டேட் செய்தது கவனத்தைப் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
PTR Palanivel Thiagarajan immediately update his twitter and facebook bio, cabinet change, portfolio cahnge, அமைச்சரவை மாற்றம், உடனடியாக ஃபேஸ்புக், ட்விட்டர் பயோ-வை மாற்றிய பி.டி.ஆர், PTR Palanivel Thiagarajan twitter and facebook bio, Tamil nadu cabinet change

அமைச்சரவை மாற்றம், உடனடியாக ஃபேஸ்புக், ட்விட்டர் பயோ-வை மாற்றிய பி.டி.ஆர்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் செய்ததையடுத்து, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உடனடியாக தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பயோ-வை அப்டேட் செய்தது கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதி மற்றும் சபரீசன் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பேசிய ஆடியோவை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்தார். மேலும், இது தனது குரலை தவறாக எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

publive-image

இதனிடையே, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பயோ-வை உடனடியாக அப்டேட் செய்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி மற்றும் சபரீசன் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை மறுத்த பிடிஆர். எனது குரலை தவறாக எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து அவரது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் என்று பயோவை அப்டேட் செய்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ptrp Thiyagarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment