Advertisment

ஜனநாயகத்தை அவமதித்தாரா பிடிஆர்? வானதி சீனிவாசனுடன் கடும் மோதல்

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடந்துக் கொண்ட விதம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமானமாக தான் கருதுகிறேன். அவர் தமிழகத்திற்கு கலங்கம் ஏற்படுத்தி விட்டார்.

author-image
WebDesk
New Update
ஜனநாயகத்தை அவமதித்தாரா பிடிஆர்? வானதி சீனிவாசனுடன் கடும் மோதல்

Palanivel Thiyagarajan Vanathi Srinivasan Twitter Controversy News Tamil : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தமிழிக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் கலந்து கொண்டார். கூட்டத்தில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து பொருள்களுக்கு ஜி.எஸ்.டி யில் இருந்து விலக்க அளிக்க பல்வேறு மாநிலங்களும் கோரிக்கை வைத்தன. தமிழகம் சார்பில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா மருந்துப் பொருள்கள் மற்றும் தடுப்பூசிகள் கொள்முதலுக்கு 0% ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

Advertisment

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பாஜக ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கொரோனா மருந்துப் பொருள்களுக்கு 0% ஜி.எஸ்.டி வரி கோரிக்கைகளை கடுமையாக எதிர்த்தனர். குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலமான கோவா போக்குவரத்து துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டத்தின் போது, தன்னை வாயை மூடு என கூறியதாகவும், கோவா ஒரு சிறிய மாநிலம் என்று கூறி அவமதித்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

கோவை அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பழனிவேல் தியாகராஜன், கூட்டத்தில் ஒரே விஷயங்களையே மீண்டும் மீண்டும் கோவா அமைச்சர் பேசினார். அவரின் பேச்சு வெறுமையாகவும் மற்றவர்களை குறுக்கிடும் விதமாகவும் இருந்தது. உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட, கூடுதல் நேரமாக கோவா அமைச்சர் பேசினார். இது இந்திய ஜனநாயகத்திற்கு சரியானதா என்று மக்களே முடிவு செய்யட்டும். கோவா மக்களிடம் எதற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது என்றும், அவர்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்றும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், கோவா உள்பட அனைத்து மாநில உரிமைக்காகவும் தான் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கோடின்ஹோ செய்தியாளர் சந்திப்பில் பொய் சொல்லியதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் பழனிவேல் தியாகராஜனை டேக் செய்து கருத்து தெரிவித்துள்ள கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடந்துக் கொண்ட விதம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமானமாக தான் கருதுகிறேன். அவர் தமிழகத்திற்கு கலங்கம் ஏற்படுத்தி விட்டார். கோவா போக்குவரத்துத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவமதிப்பு செய்வதால், தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. பழனிவேல் தியாகராஜன் இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் குறிப்பிட்டிருந்தார்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நடந்ததை முழுமையாக விளக்கி கூறியும், அதை புரிந்துக் கொள்ளாமல் கருத்து தெரிவித்துள்ள வானதிக்கு கோபத்துடன் ட்விட்டரில் பதிலடி அளித்துள்ளார் பழனிவேல் தியாகராஜன். அவரின் ட்விட்டர் பதிவில், உங்களின் பொய்களுடன் ட்விட்டரில் என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள். அதற்கு பதிலாக பயனுள்ள மற்ற வேலைகளை செய்யுங்கள். நீங்கள் பிறவியிலேயே பொய்யரா அல்லது, IQ திறன் குறைந்தவரா எனவும் வானதிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

அவரது பதிவில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் யாரும் யாரையும் அவதிக்கப்படலாம் என நினைக்கிறீரகளா என கேட்டதோடு, எனது கேள்விக்கு பதிலளிக்காதீர்கள். இது உங்களுக்கு கஷ்டமான கேள்வி தான் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு, வானதியை ட்விட்டரில் பிளாக்கும் செய்துள்ளார் பழனிவேல் தியாகராஜன்.

இதனை தொடர்ந்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், ‘தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்பது வருத்தமளிக்கிறது. அவர் மீதான விமர்சனங்களை பொறுத்தக் கொள்ள முடியாமல் பிளாக் செய்வது போன்ற நடவடிக்கைகளை நாடலாம். பழனிவேல் தியாகராஜன் என்னை பொய்யர் அல்லது புத்தி சுவாதீனம் குறைந்தவர் என விமர்சிக்கிறார். இருந்தாலும், அவரின் விமர்சனங்கள் அவர் தவறிழைத்திருக்கும் உண்மையை மாற்றாது. ஹெ.ராஜா மற்றும் சத்குரு மீதான உங்களின் விமர்சனங்களே, உங்களின் தன்மையை வெளிக் கொண்டு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வானதி சினிவாசனின் தொடர்ச்சியான பதிவில், பழனிவேல் தியாகராஜனின் வார்த்தை பயன்பாடுகளில் இருந்தே அவரின் அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. தனிப்பட்ட முறையில் மக்களை அவமதிப்பது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது அவரின் பாத்திரத்துக்கு சான்றாகும் எனவும், உங்கள் சொற்களை கவனித்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanathi Srinivasan Gst Ptrp Thiyagarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment