மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதியமைச்சருமான பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்.
Advertisment
இதையடுத்து, சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிடுவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.
இந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் மற்றும் ஹால்டியா குழுமத்தினர் சந்தித்து தமிழகத்தில் தொழில் மூதலீடு செய்வது குறித்து ஆலோசித்தாக பதிவிட்டிருந்தார்.
நிதியமைச்சரின் இந்த பதிவிற்கு டிவிட்டர் பயனர் ஒருவர் மதுரைக்கு நிறைய தொழில் முதலீடுகளையும், தொழிற்சாலைகளையும், ஐடி நிறுவனங்களையும் கொண்டு வந்து சென்னை கோவை, பெங்களூருவை போல மதுரையில் தொழில் வாய்ப்புகளை பெருக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த நிதியமைச்சர்… அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், நீண்ட காலமாக அதற்கு வேலை செய்து வருவதாகவும், நீங்கள் நினைப்பதை விட மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என அவருக்கு பதில் அளித்துள்ளார்.
நிதியமைச்சரின் பதிலால் மதுரை மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள், தொழில் முதலீடுகள் பெருகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"