திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், கொடியாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை அதன் குட்டியோடு நடமாடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடியாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை அதன் குட்டியோடு நடமாடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கேமராக்கள் பொருத்தினர். இது குறித்த விபரம் வருமாறு:
திருச்சியை அடுத்த அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கொடியாலம் கிராமத்தில் இரவில் மா்ம விலங்கு நடமாட்டம் உள்ளதாகவும், இவ் விலங்கு வாழை தோட்டத்தில் புகுந்து வாழைகளை ஒடித்து வருகிறது எனவும் அதன் கால் தடங்களை பாா்த்த பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டம் என அச்சப்பட்டு வயல் வெளிகளுக்கு சென்று வர மறுத்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் அயிலை சிவசூாியன் மூலம், திருச்சி வனத்துறை அலுவலா் கவனத்திற்கு கொன்டு செல்லப்பட்டதில், கடந்த 4−நாட்களாக வன அலுவலா்கள் கொடியாலம் கிராமத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தனா். கால் தடத்தின் ஆய்வு அடிப்படையில் இது சிறுத்தைக்கான அறிகுறி இல்லையெனவும், பொதுமக்கள் அச்சத்தை கவனத்தில் கொன்டு மா்ம விலங்கின் நடமாட்டத்தை கன்டறிய கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் இன்று வியாழன் கொடியாலம் கிராமத்தில் சந்தேகத்திற்குறிய இடத்தில் திருச்சி வனசரகா் கோபிநாத், திருச்சி பிாிவு வனவா் பாலசுப்பிரமணியன், வனகாவலா் வேலாயுதம் மற்றும் வனகாவலா்கள் கண்கானிப்பு கேமரா பொருத்திவுள்ளனா். இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“