Advertisment

காலமானர் கருணாநிதி : நாளை அரசு விடுமுறை அறிவிப்பு!

அரசு சார்பாக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karunanidhi Medical Report

கருணாநிதி நலம்பெற வேண்டுமென்று காவேரி மருத்துவமனை முன்பு கண்ணீருடன் காத்திருந்த தொண்டர்

திமுக தலைவர் கருணாநிதி : கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை (8.8.18) தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திமுக தலைவர் கருணாநிதி:

வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்ட கருணாநிதி இன்று மாலை காவேரி மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மறைவு தமிழகத்தையே உலுக்கி உள்ளது.நேற்று மாலை முதல் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 6:10 மணிக்கு அவர் காலமானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவர் என்றாலும், 5 முறை முதல்வராக இருந்தவர். இப்போதும் அவர் திருவாரூர் தொகுதி எம்எல்ஏ. தமிழ் மக்களின் தனிப் பெரும் தலைவராகவும், இந்திய அரசியலின் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தவர்.

அவரது மறைவையொட்டி நாளை (8.8.2018) தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது அரசு. மேலும் அரசு சார்பாக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுவை மாநிலத்துக்கு நாளை பொது விடுமுறை என்று அறிவித்துள்ளார். மேலும் 3 நாட்களுக்கு புதுச்சேரி அரசு சார்பாக துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment