scorecardresearch

2021-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் அறிவிப்பு

2021-ம் ஆண்டு, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் விடுமுறை இல்லை.

2021-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் அறிவிப்பு
Public Holidays 2021 list

2021 Public Holidays Tamilnadu Government Tamil News: உலகளவில் அனைவரின் நாட்குறிப்பிலும், 2020-ம் ஆண்டின் பெரும்பாலான நாள்கள் வெற்றிடமாகவே இருக்கும். கொரோனாவின் பாதிப்பால், இந்த ஆண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நாள்கள்தான் அதிகம். ‘இயல்பு நிலைக்கு எப்போது திரும்புவோம்’ என நாள்களை எண்ணிக்கொண்டிருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. இந்நிலையில், 2021-ம் ஆண்டிற்கான அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வங்கிகளுக்கான பொது விடுமுறை பட்டியலைத் தமிழக அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது. இந்த விடுமுறைகள், Negotiable Instruments Act (1881) சட்டத்தின்  அடிப்படையிலானவை. மேலும், வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகள் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு 23 பொது விடுமுறைகள் உள்ளன. இவற்றில் வார நாட்களில் 17, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6 விடுமுறை நாள்கள் உள்ளன. 2021-ம் ஆண்டு, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் விடுமுறை இல்லை. 2021-கான பொது விடுமுறைகளின் பட்டியலை இனி பார்க்கலாம்.

தமிழக அரசு விடுமுறைகள் 2021:

முதல் காலாண்டு
ஜனவரி 1, வெள்ளி- புத்தாண்டு
ஜனவரி 14, வியாழன்- பொங்கல்
ஜனவரி 15, வெள்ளி- திருவள்ளுவர் நாள்
ஜனவரி 16, சனி- உழவர் திருநாள்
ஜனவரி 26, செவ்வாய்- குடியரசு தினம்

இரண்டாவது காலாண்டு
ஏப்ரல் 1, வியாழன்- வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான ஆண்டுக் கணக்குகள் நிறைவு செய்தல்
ஏப்ரல் 2, வெள்ளி- புனித வெள்ளி
ஏப்ரல் 13, செவ்வாய்- தெலுங்கு புத்தாண்டு தினம்
ஏப்ரல் 14, புதன்- தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 25, ஞாயிறு- மகாவீர் ஜெயந்தி
மே 1, சனி- மே தினம்
மே 14, வெள்ளி- ரம்ஜான்
ஜூலை 21, புதன்- பக்ரித்

மூன்றாவது காலாண்டு
ஆகஸ்ட் 15, ஞாயிறு- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20, வெள்ளி- முகரம்
ஆகஸ்ட் 30, வெள்ளி- கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 10, திங்கள்- விநாயகர் சதுர்த்தி

நான்காவது காலாண்டு
அக்டோபர் 2, சனி- காந்தி ஜெயந்தி
அக்டோபர் 14, வியாழன்- ஆயுத பூஜை
அக்டோபர் 15, வெள்ளி- விஜய தசமி
அக்டோபர் 19, செவ்வாய்- ஈத்-இ-மிலாத்-உன்-நபி
நவம்பர் 4, வியாழன்- தீபாவளி<br />டிசம்பர் 25, சனி- கிறிஸ்துமஸ்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Public holidays 2021 list tamilnadu government leave tamil news