முழு ஊரடங்கு உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
சென்னை உள்ளிட்ட ஐந்து பெருநகரங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 27 ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட ஐந்து பெருநகரங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Advertisment
கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய பெருநகரங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கும்; சேலம் மற்றும் திருப்பூர் நகரங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முழு ஊரடங்கு அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க திரண்டதால் சமூக விலகலும் மீறப்பட்டுள்ளதாகவும், திடீரென முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, மக்களின் வாழ்வாதாரத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த அறிவிப்பை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என அறிவிக்கவேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு ஏப்ரல் 27 ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"