திண்டுக்கல் செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்லும் பாதையில் லட்சுமிபுரத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. டோல்கேட் இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் இன்று சுங்ககேட் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் டோல்கேட்டை அடித்து நொறுக்கியதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்; வத்தலகுண்டு, லட்சுமிபுரம், சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி, சிங்காரகோட்டை உள்ளிட்ட பொதுமக்கள் தினந்தோறும் காய்கறி, மலர்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களை இப்பகுதி வழியாகத் தான் கொண்டு செல்கிறோம். ஆகவே பொதுமக்களை பாதிக்கும் டோல்கேட்டை திறக்க கூடாது எனக் கூறி டோல்கேட் அருகே இன்று காலை போராட்டம் நடத்தினர். அங்கு இருந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சம்பந்தப்பட்ட நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது பிரச்சனையாகி பின்னர் பொதுமக்கள் டோல்கேட்டை அடித்து உடைத்தனர். இதனால் அவ்வழியே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/03/12/Fg7VQeYq8PlVw9sLncW5.jpg)
தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வத்தலக்குண்டு டோல்கேட் நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. நாளை முதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்