புதுவையில் சரியான நேரத்திற்கு பணிக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் சரியாக காலை 8.45 மணிக்கு வர வேண்டும். ஆனால், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவது கிடையாது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாவதோடு, அரசின் திட்டங்களும் தேக்கமடைவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதுதொடர்பாக புதுவை அரசின் அனைத்து தறை தலைவர்களுக்கும், புதுவை அரசு சார்பு செயலர் உத யக்குமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:-அரசு ஊழியர்கள் குறித்த நேரத்தில் காலம் தவறாமல் பணிக்கு வரவேண்டும். காலம் கடந்து பணிக்கு வருவது மற்றும் பணி தொடங்கிய பின்னும் இருக்கையில் இல்லாமல் இருப்பதை அரசு ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். நேரம் தவறாமல் பணிக்கு வருவதால், பொதுமக்களிடையே மொத்த துறையும் நன்மதிப்பு பெறும்.
அரசு ஊழியர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்ய வேண்டும். மேலும் அந்தந்த துறைத்தலைவர்கள் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.இந்த உத்தரவை தொடர்ந்து காலதாமதாக பணிக்கு வருவோர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.