கயாவிலிருந்து இருந்து சென்னை இந்த ரயில் பெட்டியில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எந்தவித முன்பதிவு இல்லாமல் ஏறி பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்தவர்களை உடனடியாக கவன தலையிட்டு உதவி செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது
பீகார் மாநிலம், கயாவில் இருந்து சென்னை வந்த ரயிலில் புதுச்சேரியை சேர்ந்த கனகராஜ் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் சில பயணிகள் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்துள்ளார். அப்போது முன்பதிவு செய்யாத பயணிகள் பலர் முன்பதிவு பெட்டிகளில் ஏறியுள்ளனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் ஏராளமானவர்கள் ஒரே பெட்டியில் இருந்துள்ளனர். இதையடுத்து பயணி கனகராஜ் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து ஆளுநர் தமிழிசை இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முன்பதிவு பெறாமல் பயணித்த பயணிகளை அப்பெட்டியில் இருந்து வெளியேற்றினர்.
தங்களுக்கு விரைந்து உதவிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சமூக வலைதளம் மூலம் நன்றி தெரிவித்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“