scorecardresearch

பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நிறுத்தப்படவில்லை: அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திட்டவட்டம்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நிறுத்தப்படவில்லை. புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்- புதுவை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார்

Pudhucherry
Pudhucherry

புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் இன்று (ஏப்ரல் 27) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “விவசாயத்துறையின் மூலமாக விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய இடுபொருட்கள் உள்ளிட்டவை வழங்க ஆரம்பிக்கப்பட்ட பாசிக் நிறுவனம் கடந்த ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டது. நாங்கள் பொறுப்பேற்றதும், நிர்வாக சீர்கேட்டை தவிர்த்து, மீண்டும் ஆரம்பிக்க பல வியாபார யுக்திகள் கையாளப்பட்டு, 11 மாத சம்பளம், போனஸ், கிராஜிவிட்டி ஆகியவை போடப்பட்டுள்ளது.

பாசிக் நிறுவனத்தை முடக்க வியாபார போட்டி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் சதி செய்கின்றனர். ஊழியர்களின் போராட்டங்கள் மூலமாக கோடை காலத்தில் குடிநீர் சப்பை, காய்கறி சப்ளை ஆகியவற்றை முடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், பாசிக் நிறுவனத்தை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பாசிக் நிறுவன ஊழியர்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை வெற்றி, தோல்வி இல்லாமல் முடிவடைந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்படாத சம்பளத்தை தற்போது வழங்க வற்புறுத்துகின்றனனர், 6-வது ஊழிய கமிஷன் பணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. படிப்படியாகத்தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும், கிட்டத்தட்ட ரூ.17 கோடி கடனை அடைத்திருக்கிறோம்.

தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். பாசிக்கின் ரூ. 400 கோடி சொத்துக்களை விற்று பணத்தை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வற்புறுத்தி வருகின்றன. படிப்படியாகத்தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும். தொழிலாளர்கள் வேலை செய்து அதன் லாபத்தை எடுத்துக்கொள்ளமாறு அரசு வலியுறுத்தி வருகிறது.

தொழிற்சங்கங்கள் இதில் சரியான முடிவு எடுக்க வேண்டும். தொழிற்சங்கங்கள் ஊழியர்களை திசை திருப்புகிறார்கள். நிறுவனம் வீணாக கூடாது என்ற எண்ணத்தில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

குடும்ப தலைவிகளுக்கு ரூ,1000 வழங்கும் திட்டம் நிறுத்தப்படவில்லை. புரளிகளை யாரும் நம்ப வேண்டாம். அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு அடுத்த வாரம் தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கப்படும், மொத்தம் 56 ஆயிரம் பெண்கள் இதில் பயன்பெறுவர். தற்போது 13 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு ஜுன் மாதம் முதல் வழங்கப்படும். கிட்டத்தட்ட ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புஷ்கரணி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. அரசின் முழு நிதியுடன் இந்த விழா நடைபெறுகிறது. தனியார் பங்களிப்பு இதில் இல்லை. யாரிடமும் நன்கொடை வாங்கவில்லை. விருப்பப்பட்டு நன்கொடை கொடுத்தவர்கள் கூட கோவில் வங்கி கணக்கில் தான் கொடுக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pudhucherry minister theni jayakumar pressmeet