புதுச்சேரியில் திங்கள்கிழமை காலை 10மணி முதல் மாலை 7மணி வரை மதுபானக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசு அம்மாநிலத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொதுமுடக்கம் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் அமலில் உள்ளது. இதனால், அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. நான்காம் கட்ட பொதுமுடக்கத்தின்போது நோய் பாதிப்பு அளவை பொறுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து தமிழகத்தில் கடந்த மே 7-8 தேதிகளில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டன. முன்னதாக, தமிழக அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்தது.
சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்று டாஸ்மாக் மது விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடைவித்தது. ஆனால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து டாஸ்மாக் மது விற்பனையை மே 16-ம் தேதியில் இருந்து விற்பனை செய்கிறது.
இந்த இடைப்பட்ட பொது முடக்க காலகட்டத்தில், முதல்முறையாக தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்பட்டன. தமிழகத்தில் கள்ளச்சாராய காய்ச்சும் நடவடிக்கைகளும் நடந்தன. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் மது விற்பனை தொடங்கப்பட்டாலும் புதுச்சேரியில் மது விற்பனை தொடங்கப்படவில்லை. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் எப்போதும் மது விலை குறைவாக இருக்கும். தமிழக அரசு மதுவிலையை உயர்த்தியதால் புதுச்சேரியில் மது விலை உயர்த்தப்படுமா அல்லது அதே விலை நீடிக்குமா? எப்போது மது விற்பனை தொடங்கும் என்ற பேச்சு இருந்துவந்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் திங்கள்கிழமை காலை 10மணி முதல் மாலை 7மணி வரை மதுபானக்கடைகள் கள்ளுக்கடைகள் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் பதுபானை விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரியில் நாளை முதல் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபானக்கடை மற்று கள்ளுக்கடைகளில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கு 20% சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது. மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறி விலைப்பட்டியலை வெளியிட்டார்.
புதுச்சேரியில் மதுபானங்களின் புதிய விலைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/Pdy-MRP-1-01-1-1-1-212x300.jpg)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"