பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
ஊழல் இல்லாத துறை ஒன்று இருந்தால் காலில் விழ தயார் என புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ நேரு கலெக்டரிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது .
புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை விமர்சித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் புதுச்சேரி மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர். போஸ்டர் ஒட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து துணை ஆட்சியர் அலுவலகத்தை சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் 50கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கலெக்டரிடம் பேசிய எம்.எல்.ஏ நேரு கூறுகையில்,
ஒரு துறையில் ஊழல் நடைப்பெறுகிறது என போஸ்டர் ஓட்டுபவர் மீது வழக்கு பதிவு செய்வது ஜனநாயக படுகொலை ஆகும். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் புரோக்கர்களை வைத்து கொண்டு ஊழல் செய்கிறார்கள் என பேசிய பா.ஜ.க ஆதரவு எம்.எல்.ஏ அங்காளன் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் ஆடியோ வெளியிட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?
அதிகாரிகளின் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தால், அவர்களுக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்பு துறை செயல்படுவது வெட்கக்கேடானது, ஊழலை வெளிக்கொணர சமூக அமைப்புகளுக்கு வேறு என்ன வழி உள்ளது? ஊழல் இல்லாத ஒரு துறையை காட்டினால் காலில் விழந்து மன்னிப்பு கேட்க தயார். புதுச்சேரியில் ஊழல் லஞ்ச லாவண்யாங்களை மக்கள் மத்தியில் சென்றடையும் விதமாக சுவரொட்டிகள் ஓட்டும் இயக்கத் தலைவர் மீது வழக்கு பதிவு செய்கின்றனர்.
குறிப்பாக திராவிடர் விடுதலை கழகம் புதுச்சேரி தலைவர் லோகு ஐயப்பன் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்வதை கண்டிக்கிறேன் . தவறுகளை கண்டறிய வேண்டிய தாங்கள் அமைதியா இருக்கிறீர்கள் மேலும் நாங்கள் பொது மக்களுக்கு சென்றடையும் விதமாக சுவரொட்டிகள் ஓட்டினால் சுவரொட்டிகள் ஒட்டும் இயக்கத் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் .தவறு செய்பவர்களை, லஞ்சம் வாங்குபவர்கள் ஊழல் செய்பவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என பேசியது ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“