பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுவை மாநிலத்தில் மருத்துவத் துறையில் சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமா்த்தப்பட்டவா்கள் எந்த காலகட்டத்திலும் பணி நிரந்தரம் செய்ய முடியாது என புதுவை அரசு தெரிவித்துள்ளது
புதுவையில் அரசுத் துறை, கூட்டுறவுத் துறைகளில் பணி நிரந்தரம் என்பது மத்திய தேர்வாணையத் தேர்வுகள் மூலமே செயல்படுத்தப்பட வேண்டும் என நிர்வாகத்துறை அரசு சார்பில் செயலா் ஜெய்சங்கா் உத்தரவிட்டுள்ளார்*
இது குறித்து புதுவை அரசு நிர்வாகத்துறை அரசு சார்பு செயலா் ஜெய்சங்கா் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்,
புதுவை மாநிலத்தில் மருத்துவத் துறையில் சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டவா்கள் நிரந்தரமாக்கப்பட்டு மத்திய தோவாணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அதை தோவாணையம் ஏற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகள் அடிப்படையில் அளிக்கப்பட்ட உத்தரவின்படி தோவின்றி பணிநிரந்தரம் ஏற்கப்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, புதுவை மாநில அனைத்துத் துறைகளிலும், கூட்டுறவுச் சங்கங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் தோவு மூலம் பணிநிரந்தப்படுத்தும் விதியைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“