/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-09-at-7.27.57-AM-1.jpeg)
Puducherry Puducherry 11 youngsters selected for police exam in same village
புதுச்சேரியில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட செட்டிப்பட்டு கிராமத்தில் 11 பேர் காவலர் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த விக்ரமன், தருண்குமார், புஷ்பராஜ், திருக்காமேஸ்வரன், சற்குணம், நந்தகுமார், அஜித்குமார், அஜித்குமார், துளசிதரன் மற்றும் பவதாரணி, கலையரசி ஆகிய இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் விக்ரமன் மாநிலத்தில் மூன்றாவது இடத்திலும், தருண்குமார் மாநிலத்தில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார். ஒரே குடும்பத்தில் இருந்து சற்குணம், அஜித் குமார் ஆகிய அண்ணன் தம்பிகள் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-09-at-7.27.57-AM-2.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-09-at-7.27.57-AM.jpeg)
மேலும் நந்தகுமார் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் அவருரும் தற்போது புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகப் பகுதி காவல்துறையை ராஜினாமா செய்து புதுச்சேரியில் பணிபுரிய உள்ளதாக அவர் கூறினார்.
கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் இந்த கிராமத்தில் ஏழு பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது போல் தொடர்ந்து நடைபெற்று வரும் காவலர் பொதுத் தேர்வில், கிராமத்தில் இருந்து 120க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று இருப்பது பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
படிப்படியாக இந்த செட்டிப்பட்டு கிராமம் போலீஸ் கிராமமாக மாறி வருகிறது. சட்டத்துக்கு புறம்பாக இளைஞர்கள் மாறிவரும் சூழ்நிலையில் இதுபோன்று இளைஞர்கள் கூட்டாக காவலர் பொதுத் தேர்வுக்கு தயாராகி தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். கிராமத்து மக்கள் இதைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
செய்தியாளர்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.