பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு நாள் பயணமாக கோவா சென்றுள்ளனர்.
தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சட்டசபை கட்டப்பட உள்ளது. இதற்காக சபாநாயகர் செல்வம் தலைமையில் தி.மு.க., காங்., என்.ஆர்.காங்., பா.ஜ., மற்றும் நியமன எம்.எல்.ஏ., க்கள் 22 பேர் கோவா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் இரவு கோவா சென்றடைந்தனர். இன்று அவர்கள், கோவா கவர்னரை சந்திக்கின்றனர். அங்கு தேனீர் விருந்து அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கோவா முதல்வரை சந்தித்த பின்பு, சட்டசபை வளாகத்தை சுற்றி பார்க்கின்றனர்.
நாளை மறுநாள் 1ஆம் தேதி சபாநாயகர் செல்வம் புதுச்சேரி திரும்புகிறார். 2ஆம் தேதி மற்ற எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி திரும்புகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“