தீவிரமாகும் கருப்பு பூஞ்சை தொற்று : புதுவையில் 5 பேருக்கு பார்வை இழப்பு

Black Fungal Infection : நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு இணையாக பரவி வரும் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக புதுவையில் 5 பேர் பார்வை இழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யூனியன் பிரதேசமான புதுவையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்த்தை கடந்து வருகிறது. இதில் பலி எண்ணிக்கையம் அதிகரித்து வருகிறத

இந்த வைரஸ் தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் புதுச்சேரி அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை அரசே கையகப்படுத்தியுள்ள நிலையில் கொரோனா நோயளிகள் சிகிச்சைக்காக அங்குஅனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்தி வரும்நிலையில், மறுபுறம்கருப்பு பூஞ்சை பெரும் தொற்றாக மாறியுள்ளது.

அதீத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ட்ராய்டு மருந்து எடுப்பவர்கள், பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள், சில தெரபிகள் எடுத்துக்கொள்வோருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதலில் வட மாநிலங்களில் ஒரு சிலருக்கு கண்டறியப்பட்ட இந்த தொற்று தற்போது இந்தியா முழுவதும் பரவியதை தொடர்ந்து பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு பூஞ்சைதொற்று காரணமான தமிழகத்தில் இதுவரை  9 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த பாதிபு புதுச்சேரியிலும் தீவிரமடைந்து வரும் நிலையில்,  புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 5 நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் கண் பார்வையை இழந்துள்ளனர். மேலும் நாள்தோறும் புதுவை, மற்றும் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு  வந்தகொண்டிருண்டிருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Puducherry 5 people loss of vision due to black fungus infection

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com