தி.மு.க பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளரை அவமதித்து பேசிய தி.மு.க பேச்சாளர் லியோனி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன்,
புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க பேச்சாளர் லியோனி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதற்கு புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம், அவதூறாக பேசிய லியொனி மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளோம்.
இதையும் படியுங்கள்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்: மருத்துவர் ராமதாஸ்
புதுச்சேரி மாநிலத்தில் முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது. இது முழுக்க முழுக்க அரசின் தவறு. சமீபத்தில் நடைபெற்ற மேல்நிலை எழுத்தர் தேர்வில் முற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டதில், 9 பேர் ஏனாம் பிராந்தியத்தில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதால் இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மருத்துவ படிப்பிலும் இதே போன்ற இட ஒதுக்கீடு ஏனாம் பிராத்தியதை சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்வாகி வருகின்றனர். ஆகவே முதல்வர் ரங்கசாமி இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் இல்லையெனில் அ.தி.மு.க போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்தார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil