Advertisment

வரி பாக்கிக்காக அரசு இடத்தை ஏலத்திற்கு கொண்டு வருவது வெட்ககேடானது – புதுச்சேரி அ.தி.மு.க

புதுச்சேரி அரசின் மக்கள் விரோத போக்கு, அரசு வரிப்பணத்தை தான்தோன்றித்தனமாக செலவு செய்வது போன்ற அரசு நடவடிக்கைகளை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும். வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கக் கூடாது – அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
puducherry admk govt

அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் புதுச்சேரியையே விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு புதுச்சேரி பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள் உள்ளது என அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது;

புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து அரசுக்கு சொந்தமான பல சொத்துக்கள் விஞ்ஞான ரீதியில், சட்ட விரோதமாக தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில், அங்கு உள்ள இடங்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கும், பல வெளிமாநில தொழில் அதிபர்களுக்கும் தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது.

கூட்டுறவு நூற்பாலைக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலம் ஸ்பின்கோ வாங்கிய கடனுக்காக தனியாருக்கு ஏலத்தின் மூலம் அரசு இடம் தாரைவாக்கப்பட்டது. தற்போது கரையாம்புத்தூரில் பாப்ஸ்கோவிற்கு சொந்தமான சுமார் 55 சென்ட் நிலத்தில் பெட்ரோல் பங்க் இயங்கி வந்தது, அப்போது சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் சுமார் ரூ. 62 லட்சம் வரி பாக்கியம் அதற்க்கு வட்டியாக சுமார் ரூ. 63 லட்சம் என ஆக ஒரு கோடியே  25 லட்சம் செலுத்தவில்லை என்பதற்காக சுமார் 30 ஆயிரம் சதுர அடி இடத்தை 25-11-24 ஏலம் விடப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான எந்த இடத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும் துணைநிலை ஆளுநரின் அனுமதியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியும் பெற்று தான் விற்பனை செய்யப்பட வேண்டும். புதுச்சேரி அரசானது சர்வ சாதாரணமாக தனது வேண்டியவர்களுக்கு இடத்தை தாரை வார்த்து வருகிறது. இதையெல்லாம் துணைநிலை ஆளுநர் தடுத்து நிறுத்துவார் என்ற எண்ணம் எங்களுக்கு உண்டு. ஆனால் ஆளுநர் இதில் வெறும் பார்வையாளராகவே உள்ளார்.

அரசு செலுத்த வேண்டிய வரி பாக்கிற்காக அரசு இடத்தை ஏலத்திற்கு கொண்டு வருவது என்பது இந்த அரசு வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும். இதன் மீது துணைநிலை ஆளுநர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே அரசு நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் புதுச்சேரியையே விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு புதுச்சேரி பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள் உள்ளது.

பல கூட்டுறவு நிறுவனங்கள் செயற்கையாக மூடப்பட்டுள்ளது. அவற்றிற்கு சொந்தமான இடங்களையும் இந்த அரசு விற்பனை செய்து வருவது என்பது வெட்கக்கேடானது. எனவே துணைநிலை ஆளுநர் அவர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே ஒரு உயர் மட்ட கமிட்டியை அமைக்க வேண்டும். அரசு சார்ந்த நிலங்கள் தனியாருக்கு குறுக்கு வழியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள, இந்த ஏலத்தையும் ஆளுநர், உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசு இடங்களை விற்பனை செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பிய அன்பழகன் இது எல்லாம் மாவட்ட ஆட்சியர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.

அரசின் தேவைக்காக இடங்களை கையகப்படுத்தும் போது அவர்கள் தேவைகளை செய்து முடிக்கவில்லை என்றால், இடங்களை கையகப்படுத்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்  என்பது தான் விதி. ஆனால் இந்த அரசனது இடங்களை தனியாருக்கு தாரை வார்த்து குறுக்கு வழியில் விற்பனை செய்து வருகிறது.

புதுச்சேரி அரசின் மக்கள் விரோத போக்கு, அரசு வரிப்பணத்தை தான்தோன்றித்தனமாக செலவு செய்வது போன்ற அரசு நடவடிக்கைகளை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும். வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கக் கூடாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுநராக இருக்க வேண்டும் என்று நம்புவதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment