புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று (மார்ச் 23) தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி அவர்களிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் செலவு ரூபாய் 75 லட்சத்திலிருந்து ரூபாய் 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவு தமிழகம் போன்று உயர்த்தப்படாமல் ரூபாய் 75 லட்சமாகவே உள்ளது.
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காரைக்கால், மாஹே, ஏனாம், புதுச்சேரி என நீண்ட நெடுந்தொலைவு கொண்ட பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது புதுச்சேரியை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்ய கூடுதல் செலவினங்கள் அதிகம் ஆகும்.
எனவே தற்போது தமிழக பாராளுமன்ற தொகுதிகளில் உயர்த்தி அறிவித்துள்ளது போன்று புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவு தொகை ரூபாய் 95 லட்சமாக உயர்த்தி தேர்தல் துறை அறிவிக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“