Advertisment

தி.மு.க.,வை மகிழ்விக்க எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் முறியடிப்போம்; புதுச்சேரி அ.தி.மு.க

அ.தி.மு.க, கட்சிகொடியை இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை; புதுச்சேரி அ.தி.மு.க எச்சரிக்கை

author-image
WebDesk
New Update
Puducherry ADMK Anbazhagan

புதுச்சேரி அ.தி.மு.க

அ.தி.மு.க கட்சிகொடியை இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடாது. இது சம்பந்தமாக ஏற்கனவே புதுச்சேரி மாநில கழகத்தின் சார்பில் டி.ஜி.பி, தேர்தல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே கழகத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் மீண்டும் மீண்டும் எங்கள் கட்சியின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்துவது சட்டவிரோத செயலாகும். இவர்கள் மீது காவல்துறையும், தேர்தல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என புதுச்சேரி அ.தி.மு.க தெரிவித்துள்ளது.

Advertisment

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் தலைமை கழக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இதையும் படியுங்கள்: மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ விருதுகள்: ‘கோயம்புத்தூர்’ முதலிடம்

அ.தி.மு.க.,வின் மூலம் துணை முதலமைச்சர் உள்ளிட்ட பதவி சுகத்தில் இருந்துகொண்டே கழகத்தை அழிக்க நினைத்தவர்களுக்கும், கழக எதிரியான தி.மு.க.,விற்கு துணை நின்று கழகத்திற்கு துரோகம் செய்த அனைவரையும், கழக தொண்டர்கள் துணையோடு, நீதிமன்றத்தின் மூலம் துவேசம் செய்து நிர்மூலப்படுத்திய எங்களது  எடப்பாடியாருக்கு புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்.

அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள், பன்னீர்செல்வம் உள்ளிட்ட துரோகிகள் நீக்கம், பொதுச்செயலாளராக எடப்பாடியார் தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட எதுவும் செல்லாது என கழக துரோகிகள் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் செல்லாது என உயர் நீதிமன்றம் இறுதியாக தள்ளுபடி செய்து தடை உத்தரவும் வழங்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

கழக பொதுக்குழு சம்பந்தமான வழக்கில் இதுவரை 9 முறை எடப்பாடியார் வெற்றி பெற்றுள்ளார். இன்னமும் தி.மு.க.,வை மகிழ்விக்க, தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை  மகிழ்விக்க, எத்தனை முறை நீதிமன்றத்திற்கு சென்றாலும் நீதி தேவதை துணையோடும், அம்மாவின் ஆசியோடும் அவற்றை பொதுச்செயலாளர் முறிடிப்பார்.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற பெஞ்சு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் 11-07-2022-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் உறுதி செய்யப்பட்ட பிறகும் அ.தி.மு.க, கட்சிகொடி என எதையும் இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடாது. இது சம்பந்தமாக ஏற்கனவே புதுச்சேரி மாநில கழகத்தின் சார்பில் டி.ஜி.பி, தேர்தல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கழகத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் மீண்டும் மீண்டும் எங்கள் கட்சியின் பெயரையோ, கொடியையோ, சின்னத்தின் குறியீட்டையோ, விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றில் வெட்கமே இல்லாமல் பயன்படுத்துவது சட்டவிரோத செயலாகும். இவர்கள் மீது காவல்துறையும், தேர்தல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனது அரசியல் சுயநலத்தால் பல கட்சிகளில் சேர்ந்து அந்த கட்சிகளை காலி செய்து கடைசியாக பன்னீர்செல்வத்திடம் பண்ருட்டி ராமச்சிந்திரன் சேர்ந்த உடனேயே பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகும் என உறுதி செய்யப்பட்டது. அதுவும் தற்போது நடந்தேறி உள்ளது. இப்படிப்பட்ட நபர்கள் அ.தி.மு.க.,வை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் அருகதையும் இல்லை.

கழகத்தின் ஒப்பற்ற பொதுச்செயலாளராக விளங்கும் எடப்பாடியார் பற்றியோ, எங்களது கழகத்தை பற்றியோ தவறாக விமர்சனம் செய்ய யாருக்கும் கழகத்தில் இடமில்லை. அப்படி விமர்சனம் செய்யாத அடிமட்ட தொண்டன், பிறருடைய தவறான துர்போதனைக்கு ஆளாகி துரோகிகள் கூட்டத்திற்கு சென்றிருந்தால் அவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் எங்களது பொதுச்செயலாளர் அவர்களை மீண்டும் கழகத்தில் சேர்த்துகொள்ள முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில கழக இணைச் செயலாளர்கள் ஆர்.வி.திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Admk Eps Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment