அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தற்கொலை : குடும்ப பிரச்சினை தான் காரணமா?

அதிமுகவின் முக்கிய பொறுப்பாளராகவும், கட்சியின் திறமைசாலியாக இருந்த நடராஜனின் மரணம் அப்பகுதி மக்களிடமும் அதிமுகவினரிடமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் முக்கிய பொறுப்பாளராகவும், கட்சியின் திறமைசாலியாக இருந்த நடராஜனின் மரணம் அப்பகுதி மக்களிடமும் அதிமுகவினரிடமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தற்கொலை : குடும்ப பிரச்சினை தான் காரணமா?

புதுச்சேரி வில்லியனூரில் சேர்ந்தவர் நடராஜன் (65). புதுச்சேரியில் அதிமுகவில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், ஒரு முறை சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்துள்ளார். மேலும் அதிமுகவின் மாநில செயலாளராகவும் இருந்து உள்ளார். இவரது வீடு வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் எதிரில் உள்ளது.

Advertisment

இந்நிலையில், நடராஜன், இன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று மதியம் நடராஜனுக்கும் அவரது மகன் சரவணனுக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் முக்கிய பொறுப்பாளராகவும், கட்சியின் திறமைசாலியாக இருந்த நடராஜனின் மரணம் அப்பகுதி மக்களிடமும் அதிமுகவினரிடமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்

புதுச்சேரி மாநில கழக முன்னாள் செயலாளரும், கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எனது பாசத்திற்குரிய அன்பு சகோதரர் திரு. நடராஜன் அவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை புதுச்சேரி கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். கழக நிறுவனர் புரட்சித் தலைவரால் கழகம் ஆரம்பிக்கப்பட்ட 1972 - ல் தன்னை கழகத்தின் உறுப்பினராக இணைத்துக் கொண்டு கழகப் பணி சிறப்பாக ஆற்றியவர்.

Advertisment
Advertisements

இரண்டு முறை கழக சட்டமன்ற உறுப்பினராகவும், பல ஆண்டுகள் மாநில கழக செயலாளராகவும், கழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். அனைவரிடமும் அன்புடன் பேசும் இனிய நற்குணம் கொண்டவர். ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் நல்ல எண்ணம் கொண்டவர். எனது அன்பு சகோதரர் திரு நடராஜன் அவர்கள் மறைவு என்பது அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமில்லாமல் கழக தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது நலன் விரும்பிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: