Kallakurichi illicit liquor | கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 19 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 16 நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அன்பழகன், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் விவகாரத்தில் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது கண் துடைப்பு நாடகம்; மனித உயிர் இழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசு,அரசியலமைப்பு சட்டம் 350 வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசை கலைக்க வேண்டும்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“