புதுச்சேரியில் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. துணை நிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் உரை நிகழ்த்தி கூட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில் ஆளுனரின் உரை குறித்து பேசிய புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன், “தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் பொய் பேசி ஆட்சிக்கு வந்துவிட்டார்” என விமர்சித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சுமார் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியா திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி அமைந்து 23 மாதம் ஆகியும் இன்றுவரை தான் அறிவித்த ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கவில்லை.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் எங்களது கூட்டணி அரசு இந்த நிதி உதவியை அறிவிக்காமலேயே மக்களின் நிலை உணர்ந்து பல்லாயிரக்கணக்கானவருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது” என்றார்.
தொடர்ந்து, துணைநிலை ஆளுனர் உரை என்பது மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும், தனிமனித வருவாயை பெருக்கவும், சுற்றுலா வசதியை மேம்படுத்தவும், நிதிநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உள்ளடக்கிய சிறப்பான உரையாகும்” என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/