புதுச்சேரி மற்றும் கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது இதனால் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Advertisment
கடந்த 10 நாட்களாக கடலூர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரியில் 40 டிகிரி வெயில் கடுமையாக தாக்கி வந்தது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே வருவதை தவிர்த்தனர்.
புதுச்சேரி பொருத்தவரை இந்தக் கடுமையான வெப்ப நிலையினால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது இந்த நிலையில் இன்று காலை ஒன்பது மணி முதல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மேகமூட்டம் ஏற்பட்டு மழை பெய்ய துவங்கியது வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை விட்டு விட்டு தூவியது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் அதேபோன்று பரவால்ல நல்ல மழை பெய்து வருகிறது இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“