/tamil-ie/media/media_files/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-23-at-1.26.14-PM-1.jpeg)
Puducherry
புதுச்சேரியிலும் ஆன்லைன் சூதாட்ட தடை மசாதா கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் லட்சுமி நாராயணன் உறுதியளித்துள்ளார்
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
பொதுமக்களை பாதிக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழகத்தில் தீர்மானம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ளது. இதேபோல் சுற்றுலா நகரம் மற்றும் ஆன்மீக பூமியான புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா புதுச்சேரி சட்டப் பேரவையில் கவன தீர்மானம் கொண்டு வந்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டத்துறை ஒப்புதல் பெற்று, புதுச்சேரி மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பேரவையில் அறிவித்தார்.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு புதுச்சேரி பேரவையில் திமுக கொண்டு வந்துள்ள கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், கல்யாண சுந்தரம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.