புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் கவரும் படகு சவாரி செய்வதற்கு அரசு சார்பில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்தார். இதற்கான ஆலோசனை கூட்டம் வருகின்ற பத்தாம் தேதி நடக்கிறது.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கக்கூடிய படகு சவாரி செய்ய சான்றிதழ் வேண்டுதல் சம்மந்தமாக உப்பளம் தொகுதி திமு எம்.எல்.ஏ அனிபால் கென்னடி வம்பாகீரபாளையம் மீனவர்களுடன் சென்று முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
புதுவை உப்பளம் தொகுதி வம்பாகீர பாளையம் உரிமையாளர் சங்கம் உப்பளம் தொகுதி திமுகஎம்.எல்.ஏ அனிபால் கென்னடி சந்தித்து கடல் பகுதியில் உரிமையுடன் சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிச் செல்ல அனுமதி பெற்று தாருங்கள் என்று வம்பாக்கீரப்பாளையம் பஞ்சாயத்தார் மற்றும் ஊர் மக்கள் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி சந்தித்து கோரிக்கை வைத்தனர்., பாண்டி - மெரினா அருகில் உள்ள உப்பனாறு ஆற்றுப் படகு சவாரி செய்வதற்கு சுற்றுலாத்துறை மூலம் விண்ணப்பம் விண்ணப்பித்து 6 மாத காலம் ஆகிறது. எங்களிடம் விண்ணப்பத்தில் கேட்டது போல் நாங்கள் படகு ஓட்டுநருக்கும். மற்றும் பயணியருக்கும். விபத்து காப்பீட்டுத்திட்டம் செய்துள்ளோம்.படகு சர்வே ரிப்போர்ட், டிரைவர் லைசென்ஸ், லைப் ஜாக்கெட், லைப் போயா, தீ அணைப்பான் மற்றும் முதலுதவி சிகிச்சைப் பெட்டி அனைத்தையும் சமர்ப்பித்துள்ளோம்.
எனவே, தயவு கூர்ந்து எங்கள் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் படகு சவாரி செய்வதற்கு உதவி செய்ய வேண்டி கேட்டுக் கொண்டார்கள்.இதனை தொடர்ந்து உப்பளம் தொகுதி திமுக எம் எல் ஏ அனிபால் கென்னடி மீனவர்களை கையோடு அழைத்துக் கொண்டு முதலமைச்சர் அவர்களிடம் சென்று மனு கொடுத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை ஏற்று வரும் 10 ஆம் தேதி இதற்கான சிறப்பு கூட்டம் வைத்து துறை சார்ந்த அமைச்சர் இயக்குனர் உங்க அதிகாரிகள் வைத்து நல்ல முடிவு செய்து தருகிறோம் என்று முதலமைச்சர் சட்டமன்றஉறுப்பினர்அனிபால் கென்னடிஅவர்களுக்கு உறுதி அளித்தார். உடன் ஊர் பஞ்சாயத்தார், கழக மாநில மீனவரணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ், மற்றும் ஊர் பொது மக்கள் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“